தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானதா?

கேள்வி :

தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்ற நபிமொழி ஆதாரப்பூர்வமானது என்று சிலர் சொல்கிறார்களே. அது சரியா?

அபூ ஸனா, யு.ஏ.இ

பதில்

நீங்கள் குறிப்பிடும் செய்தி இது தான்.

سنن النسائي (10/ 150)

3053 – أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவரை பற்றிக் கொள் ஏனெனில் சொர்க்கம் அவரது பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா,

நூல்கள் : நஸாயீ (3053), ஹாகிம் (2502)

இந்த செய்தியில் முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை என்று நாம் முன்னர் குறிப்பிட்டிருந்தோம்.

முன்னர் நாம் எழுதியதை விரிவாக அறிந்து கொள்ள

https://onlinetntj.com/articles/aaivu/thayin-kaladiyil-sorkama

ஆனால் தற்போது சிலர் மறு ஆய்வு செய்ததாகவும். இது ஆதாரப்பூர்வமானதுதான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் அறியப்படாதவர் அல்ல!

அவர் நம்பகமானவர்தான் என்று சில ஆதாரங்களை குறிப்பிட்டுள்ளனர். அவை சரியா? என்பதை காண்பதற்கு முன்னர் யாரென அறியப்படாதவர் (மஜ்ஹுல்) என்று யாரை குறிப்பிடுவார்கள். அதுப்பற்றி விவரங்களை காண்போம்.

யாரென அறியப்படாதவர் (மஜ்ஹுல்) என்பவர் இரண்டு வகைப்படுவர்.

  1. மஜ்ஹுலுல் ஐன்.
  2. மஜ்ஹுலுல் ஹால் அல்லது மஸ்தூர்.

எவரிடமிருந்து ஒரே ஒரு அறிவிப்பாளர் அறிவித்திருப்பாரோ அவரை மஜ்ஹுலுல் ஐன் (அறவே அறியப்படாதவர்) என்று சொல்லப்படுவார்.

எவரிமிடருந்து இரண்டு அல்லது அதற்கும் மேலானவர்கள் அறிவித்து அவரை யாரும் நம்பகமானவர் என்று சொல்லப்படாதவரை மஜஹுலுல் ஹால் (அவரது நிலை அறியப்படாதவர்) என்று சொல்லப்படும்.

அதாவது அவர் யாரெனத் தெரிகிறது. ஆனால் அவர் நம்பகமானவரா என்ற விவரம் இல்லை என்பது அதன் கருத்தாகும்.

شرح متن نخبة الفكر (1/ 42)

فعند المحدثين -كما سيأتي إن شاء الله معنا في مبحث الجهالة- أن الراوي الذي لا يروي عنه إلا راو واحد ولم يُوَثَّق من إمام معتبر يقال لهذا الراوي: مجهول العين، وإذا روى عنه أكثر من واحد اثنان ، أو أكثر ولم يوثق فهذا يقال له: مجهول الحال يعني عينه عرفت لكن حاله لم تُعْرَف

ஒருவரிடமிருந்து ஒரே ஒரு அறிவிப்பாளர் மட்டுமே அறிவித்து, தகுதியான இமாம் எவரும் அவரை உறுதிப் படுத்தவில்லையென்றால் அந்த அறிவிப்பாளருக்கு ‘மஜ்ஹுலுல் ஐன்’ என்று சொல்லப்படும். அவரிடமிருந்து ஒருவரைவிட அதிகமாக இரண்டு அல்லது அதைவிட அதிகமானவர் அறிவித்திருந்து அவரை யாரும் நம்பகமானவர் என்று உறுதிப்படுத்தவில்லையானால் அவரை ‘மஜ்ஹுலுல் ஹால்’ என்று சொல்லப்படும். அதாவது அவர் யாரெனத் தெரிகிறது. ஆனால் அவருடைய நிலை தெரியவில்லை.

நூல்: ஷரஹ் மத்னு நுக்பத்துல் பிக்ர், பாகம்:1, பக்கம்:42

ஒரு அறிவிப்பாளர் இன்னார் என்று அறியப்பட்டாலும் அவரது நம்பகத் தன்மை தொடர்பான நிலை அறியப்படவில்லையென்றால் அந்த அறிவிப்பு பலவீனம் என்பதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியைக் குறிப்பிடலாம்.

فتح الباري – ابن حجر (4/ 176)

وأما أثر أم سلمة فوصله بن أبي شيبة من طريق الثوري أيضا عن فرات عن مولى أم سلمة أنه رأى أم سلمة تحتجم وهي صائمة وفرات هو بن عبد الرحمن ثقة لكن مولى أم سلمة مجهول الحال

“நான் உம்மு ஸலமா(ரலி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் இரத்தம் குத்தி எடுத்தைப் பார்த்துள்ளேன்“ என்று உம்மு ஸலமா அவர்களின் அடிமை (கைஸ்) கூறுகிறார். அவரிடமிருந்து  ஃபுராத் என்பார் அறிவிக்கிறார். அவரிடமிருந்து ஸவ்ரீ என்பார் வழியாக இப்னு அபீ ஷைபா முழுமையான அறிவிப்பாளர் தொடரில் பதிவு செய்துள்ளார்.

புராத் என்பவர் அப்துர்ரஹ்மானின் மகனாவார். இவர் நம்பகமானவர். என்றாலும் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமை மஜ்ஹுலுல் ஹால் (அவரின் நம்பத்தன்மையின் நிலை அறியப்படவில்லை)

நூல் : ஃபத்ஹூல் பாரி (4/176)

உம்மு ஸலாமா (ரலி) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் இரத்தம் குத்தி எடுத்தார்கள் என்ற செய்தி பலவீனம் என்பதற்கு ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், உம்மு ஸலமா (ரலி) அவர்களின் அடிமையின் நம்பத்தன்மை தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு அறிவிப்பாளர் யாரெனவும் தெரிய வேண்டும். அவர் நம்பகமானவர் என்றும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இரண்டும் இருந்தால்தான் அவரை நம்பகமானவர் என்றும் அவர் அறிவிக்கும் செய்தி ஆதாரப்பூர்வமானது என்றும் சொல்ல முடியும்.

முஹம்மத் பின் தல்ஹா எப்படி?

முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரிடமிருந்து இரண்டுக்கும் மேற்பட்டவர் அறிவித்திருப்பதால் அவர் யாரென அறியப்படாதவர் என்று சொல்லமுடியாது என்று வாதிடுகிறார்கள்.

இரண்டுக்கும் மேற்பட்டவர் அறிவித்தால் மஜ்ஹுலுல் ஐன் என்பதுதான் நீங்கும். அவர் நம்பகமானவர் என்பதை தகுந்த சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும்.

அவர் நம்பகமானவர்தான் என்பதற்கும் சில செய்திகளை கொடுத்துள்ளார்கள்.

ஹாகிம் அவர்களின் சான்றிதழ் சரியா?

“ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸின் அடியில் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஹாகிம் கருத்துப்படி நம்பகமானவர்கள் என்றால் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் தல்ஹாவும் நம்பகமானவர் ஆகிறார்”

ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டு இது ஆதாரப்பூர்வமானது என்று சொல்லிவிட்டதால் இதன் அறிவிப்பாளர் அனைவரும் நம்பகமானவர் என்று வாதிடுகிறார்கள்.

ஹாகிம் அவர்களின் நூலை படித்தவர்களுக்கு தெரியும் அவர் அறிவிப்பாளரை தரம் பிரிப்பதில் அலட்சியப்போக்குள்ளவர். அவரின் பெரும்பாலான முடிவுகள் தவறாக அமைந்துள்ளது. ஹாபிழ் தஹபீ அவர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு சில செய்திகளை குறிப்பிடுகிறோம்.

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (3/ 75)

 4440 – حدثني أبو بكر أحمد بن بالويه من أصل كتابه ثنا محمد بن عثمان بن أبي شيبة ثنا يحيى بن معين ثنا هيثم عن العوام بن حوشب عن سليمان بن أبي سليمان عن أبيه عن أبي هريرة رضي الله عنه : عن النبي صلى الله عليه و سلم قال : الخلافة بالمدينة و الملك بالشام

 صحيح

تعليق الذهبي قي التلخيص : سليمان بن أبي سليمان وأبوه مجهولان

மதீனாவில் கிலாபத் இருக்கும். சிரியாவில் ஆட்சி இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது என்று ஹாகிம் அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதில் சுலைமான் பின் அபீ சுலைமான் என்பவரும் அவருடைய தந்தையும் யாரென அறியப்படாதவர் என்று தஹபீ அவர்கள் கூறுகிறார்கள்.

யாரென்றெ அறியப்படாதவர்கள் எனத் தனக்குத் தோன்றினாலும் அவர்கள் இடம் பெற்ற அறிவிப்பாளர் தொடரையும் சரியான அறிவிப்பாளர் தொடர் என்றே இமாம் ஹாகிம் குறிப்பிடுவார். இதனை பின்வரும் சான்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (1/ 668)

 1807 – و حدثنا أبو بكر بن إسحاق أنبأ محمد بن محمد بن حبان الأنصاري ثنا محمد بن الصباح الجرجرائي ثنا مروان بن معاوية الفزاري ثنا أبو المليح الهذلي عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : من لا يدعو الله يغضب عليه و إن الله ليغضب على من يفعله ذلك أحد غيره يعني في الدعاء

 هذا حديث صحيح الإسناد فإن أبا صالح الخوزي و أبا المليح الفارسي لم يذكرا بالجرح إنما هما في عداد المجهولين لقلة الحديث

அல்லாஹ்விடம் பிரார்த்திக்காதவர் மீது அல்லாஹ் கோபப்படுகிறான் என்ற ஹதீஸை பதிவு செய்து இமாம் ஹாகிம் பின்வருமாறு கூறுகிறார். “இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாகும். அபூ ஸாலிஹ் அல்ஹவ்சீ, அபுல் மலீஹ் அல்ஃபாரிஸீ ஆகிய இருவர் மீதும் குறைகூறப்படவில்லை. அந்த இருவரும் ஹதீஸ்களை குறைவாக அறிவித்துள்ளதால் மஜ்ஹூலானவர்களாக (யாரென்றே அறியப்படாதவர்களாக) கணக்கிடப்படவேண்டியவர்கள்.

நூல் : ஹாகிம் (1807)

(குறிப்பு : இமாம் ஹாகிம் குறிப்பிடும் இருவரும் மஜ்ஹூல் அல்ல. ஆனால் இமாமின் பார்வையில் அவர்கள் மஜ்ஹூல்)

இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கூட இமாம் ஹாகிம் அவர்கள் சரியான அறிவிப்பாளர் தொடர் என்று கூறியுள்ளார். இதற்கு உதாரணமாக பின்வரும் செய்தியைக் குறிப்பிடலாம்.

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (2/ 672)

4228 – حدثنا أبو سعيد عمرو بن محمد بن منصور العدل ثنا أبو الحسن محمد بن إسحاق بن إبراهيم الحنظلي ثنا أبو الحارث عبد الله بن مسلم الفهري ثنا إسماعيل بن مسلمة أنبأ عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن جده عن عمر بن الخطاب رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : لما اقترف آدم الخطيئة قال يا رب أسألك بحق محمد لما غفرت لي فقال الله : يا آدم و كيف عرفت محمدا و لم أخلقه ؟ قال : يا رب لأنك لما خلقتني بيدك و نفخت في من روحك و رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعلمت أنك لم تضف إلى اسمك إلى أحب الخلق فقال الله : صدقت يا آدم إنه لأحب الخلق إلي ادعني بحقه فقد غفرت لك و لولا محمد ما خلقتك

 هذا حديث صحيح الإسناد و هو أول حديث ذكرته لعبد الرحمن بن زيد بن أسلم في هذا الكتاب

تعليق الذهبي قي التلخيص : بل موضوع

ஆதம் (அலை) அவர்கள் நபியின் பொருட்டால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடினார்கள் என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்துவிட்டு. இது ஆதாரப்பூவர்மான அறிவிப்பாளர் வரிசை கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்ற இட்டுகட்டிச் சொல்லும் அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை தஹபீ அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனவேதான் ஹாகிம் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்றால் அறிஞர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

النكت الوفية بما في شرح الألفية للبقاعي (4/ 9)

الثاني : أَنَّ ابنَ الصلاح قد حكمَ بما يليقُ على مقتضى مذهبهِ فحكمَ بضعفِ ما فيهِ علةٌ وبالاحتجاجِ بما انفردَ بتصحيحهِ ، ولم تظهرْ فيهِ علةٌ ، وامتنعَ مِنْ إطلاقِ الصحةِ عليهِ ؛ لأنَّ الحاكمَ متساهلٌ فلم يعتمدهُ

ஹாகிம் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அலட்சியப் போக்குள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல் : நுகத், பாகம் :4,பக்கம்: 9)

எனவே ஹாகிமை ஆதாரமாக காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

தஹபீ இமாமின் கூற்று சரியா?

அடுத்த ஆதாரமாக தஹபீ அவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளார்கள்.

“ஹாகிம் நூலை திறனாய்வு செய்த தஹபி அவர்கள் இது சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளார். அதாவது அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பமகானவர்கள் என்பது இதன் கருத்தாகும்”

தஹபீ அவர்கள் தனது காலத்திற்கு முந்திய அறிஞர்களின் கருத்துக்களை கவனித்து ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றோ அல்லது பலவீனமானவர் என்றோ குறிப்பிடுவார்கள். அவர்களின் முடிவிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளன.

உதாரணமாக

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (1/ 448)

 1148 – حدثنا علي بن حمشاد ثنا أبو المثنى ثنا أبو الوليد الطيالسي

 و أخبرنا أحمد بن سهل الفقيه ببخارى ثنا قيس بن أنيف ثنا قتيبة بن سعيد قالا : ثنا الليث بن سعد عن يزيد بن أبي حبيب عن عبد الله بن راشد الزوفي عن عبد الله بن أبي مرة الزوفي عن خارجة بن حذافة العدوي قال : خرج علينا رسول الله صلى الله عليه و سلم فقال : إن الله قد أمدكم بصلاة هي خير لكم من حمر النعم و هي الوتر فجعلها لكم فيما بين صلاة العشاء إلى صلاة الفجر

 هذا حديث صحيح الإسناد و لم يخرجاه

 رواته مدنيون و مصريون و لم يتركاه إلا لما قدمت ذكره من تفرد التابعي عن الصحابي

تعليق الذهبي قي التلخيص : صحيح

சிவப்பு ஒட்டகம் கிடைப்பதைவிட அல்லாஹ் உங்களுக்கு தொழுகை நீட்டி (அதைவிட சிறந்த நன்மையை) தந்துள்ளான். அதுதான் வித்ரு தொழுகையாகும். அந்த தொழுகையை இஷாவிற்கும் பஜ்ருக்குமிடையில் அமைத்துள்ளான்.

என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசை கொண்டதாகும் என்று சொல்லியுள்ளார்கள். தஹபீ அவர்களும் இது ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் தஹபீ அவர்கள். இந்த செய்தியில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் அபீ முர்ரா என்பவரை மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் இதே செய்தியையும் குறிப்பிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

ميزان الاعتدال (2/ 501)

4594 – عبدالله بن أبى مرة [ د، ت، ق ] الزوفى.

وقيل ابن مرة.له عن خارجة في الوتر.لم يصح.

قال البخاري: لا يعرف سماع بعضهم من بعض.رواه يزيد بن أبى حبيب، عن عبدالله بن راشد، عنه، عن خارجة بن حذافة.

قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال: إن الله قد أمدكم (3) بصلاة هي خير لكم من حمر النعم [ الوتر ]

அப்துல்லாஹ் பின் அபீ முர்ரா என்பவர் காரிஜா வழியாக வித்ரு தொழுகை தொடர்பாக அறிவித்துள்ளார். இந்த செய்தி ஆதரப்பூர்வமானது இல்லை. இதில் சில அறிவிப்பாளர் சிலரிடம் செவியுறவில்லை என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 2, பக்கம்: 501

தஹபீ இமாம் அவர்களே தனது வேறு நூலில் ஒரு செய்தியை பலவீனமானது என்று சொல்லிவிட்டு ஹாகிமில் ஆதாரப்பூர்வமானது என்று சொல்லியுள்ளார்கள். மனிதர் என்ற அடிப்படையில் இது போன்ற தவறுகள் ஏற்பட்டுள்ளது.

இது போன்று பல உதாரணங்கள் காட்டமுடியும்.

எனவே பொதுவாக ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று யார் சொன்னால் அதன் அறிவிப்பாளர் அனைவரும் நம்பகமானவரா என்று நாம் பார்த்த பின்னரே உறுதி செய்ய வேண்டும்.

இப்னு ஹஜரின் கூற்றுக்கான விளக்கம்

அடுத்தாக

“இப்னு ஹஜர் அவர்கள் இவர் உண்மையாளர் என்று கூறியுள்ளார்”

எனவே அவர் நம்பகமானவர் என்று வாதிடுகிறார்கள்.

இப்னு ஹஜர் அவர்கள் ஸதூகுன் (உண்மையாளர்) என்ற வாசகத்தை யார் யாருக்கெல்லாம் பயன்படுத்துவார் என்பது தெரிந்தால் இதன் உண்மை நிலை தெளிவாகிவிடும்.

الكاشف (1/ 30)

وهذا الانحاء الثلاثة التي وقفها الذهبي من توثيق ابن حبان: ثقة، صدوق، وثق، جاء مثلها من ابن حجر في ” التقريب “، فهو يقول: ثقة، صدوق، مقبول، وهذا اللفظ الاخير هو الاكثر الاغلب،

وهذا الانحاء الثلاثة التي وقفها الذهبي من توثيق ابن حبان: ثقة، صدوق، وثق، جاء مثلها من ابن حجر في ” التقريب “، فهو يقول: ثقة، صدوق، مقبول، وهذا اللفظ الاخير هو الاكثر الاغلب،

இப்னு ஹஜர் அவர்களும் இப்னுஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் என்று சொன்னால் அதை பின்பற்றி ‘ஸிகதுன்’ ‘ஸதூகுன்’(உண்மையாளர்), மக்பூலுன் என்று குறிப்பிடுவார்.

நூல்: அல்காஷிப் முன்னுரை

இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று சொல்லிவிட்டால் அவரை ஸதூகுன்- உண்மையாளர் என்று குறிப்பிடும் வழக்கும் உள்ளது.

இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரைப்பற்றி எந்த குறையையும் அறியவில்லை என்றால் (அதாவது யாரெனத் தெரியாதவர்) அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துவிடுவார். ஒருவரைப்பற்றி எந்தக் குறையும் அறியப்படவில்லை என்பதால் மட்டுமே ஒருவரை நம்பகமானவர் என மதிப்பீடு செய்வதை பிற அறிஞர்கள் ஏற்கவில்லை.

யாரென அறியப்படாதவர்களைப் பற்றியும் எந்த குறையும் வராது.

எனவே இப்னுஹிப்பான் அவர்கள் மஜ்ஹுலான (யாரென அறியப்படாத) வரையும் நம்பகமானவர் என்று சொல்லிவிடுவார். இப்படிப்பட்டவரையும் ஹாபிழ் இப்னுஹஜர் அவர்கள் ஸதூகுன் என்று சொல்லிவிடுவார்.

உதாரணமாக

مسند أحمد بن حنبل (4/ 226)

 18013 – حدثنا عبد الله حدثني أبي ثنا إبراهيم بن خالد حدثني أمية بن شبل وغيره عن عروة بن محمد قال حدثني أبي عن جدي قال قال رسول الله صلى الله عليه و سلم : إذا استشاط السلطان تسلط الشيطان

மன்னன் கோபப்பட்டால் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்துவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் அஹ்மத்

இந்த செய்தியில் இடம்பெறும் முஹம்மத் பின் அதிய்யா பின் உர்வா என்பவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் குறிப்பிடும் போதும் ஸதூகுன் (உண்மையாளர்) என்று சொல்லியுள்ளார்கள்.

تقريب التهذيب (2/ 496)

6140- محمد ابن عطية ابن عروة السعدي صدوق من الثالثة مات على رأس المائة ووهم من زعم أن له صحبة د كن

முஹம்த் பின் அத்தியா பின் உர்வா என்பவர் ‘ஸதூக்குன்’ (உண்மையாளர்)

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 2, பக்கம்: 496

முஹம்மத் பின் அதிய்யா பின் உர்வா என்பவரை இப்னுஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சொல்லவில்லை.

எனவே இப்னு ஹஜர் ஒருவரை ஸதூக் உண்மையாளர் என்று கூறுவது மட்டுமே அந்த அறிவிப்பாளரின் நம்பகத்தன்மையை நிரூபிக்க போதுமானதல்ல.

மேலும் இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரையும் இப்னுஹிப்பானைத் தவிர வேறு யாரும் நம்பகமானவர் என்று சொல்லவில்லை.

ஹாகிம் இடம்பெறும் சில செய்திகள் பலவீனமானது என்பதற்கு தஹபீ சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நாம், தாயின் காலடியில் சொர்க்கம் என்ற செய்தி ஆதாரப்பூர்வமானது என்று சொல்லும் தஹபீயின் கருத்தை ஏன் ஏற்கவில்லை என்ற ஐயம் ஏற்படலாம்.

தஹபீ இமாம் அவர்கள் ஹாகிமில் இடம்பெறும் ஒரு செய்தியை பலவீனம் என்றோ அல்லது அந்த செய்தியில் யாரென அறியப்படாதவர் இருக்கிறார் என்று சொன்னால் எதையும் ஆய்வு செய்யாமல் நாம் ஏற்றுக் கொள்வதில்லை. பலவீனமானவர் இருக்கிறார் என்று அவர் சொன்னால், அவர் பலவீனமானவராக இருந்தால்மட்டுமே ஏற்போம். இல்லையெனில் நாம் ஏற்கமாட்டோம்.

இதைப் போன்று தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்பதை ஆதாரப்பூர்வமானது என்று தஹபீ அவர்கள் சொன்னால் அதையும் ஆய்வு செய்தே பார்கிறோம். அதில் அவர் சொன்னது போல் அனைவரும் நம்பகமான அறிவிப்பாளராக இருந்திருந்தால் நாம் ஏற்றிருப்போம். ஆனால் அதில் அவர் யாரென அறியப்படாத முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பவரும் அவருடைய தந்தை தல்ஹா பின் அப்துல்லாஹ் என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. எனவேதான் தஹபீ அவர்களின் கூற்றை நாம் ஏற்கவில்லை.

ஹாகிம் அவர்கள் ஒரு செய்தியை ஆதாரப்பூர்வமானது என்று சொன்னால் அதை அப்படியே தஹபீ ஏற்பதில்லை. மாறாக தனது ஆய்வின் படி என்ன முடிவோ அதைத்தான் தஹபீ கூறுகிறார்.  அதில் குறைகளை கண்டால் ஹாகிம் அவர்களின் கூற்றை ஏற்காமல் தஹபீ அவர்கள் தம் ஆய்வின் படி முடிவு செய்து சொன்னாரோ அதைப் போன்றே நாமும் தஹபீ அவர்களின் கூற்றை ஆய்வு செய்து அது சரியில்லை என்பதால் அவர்களின் கூற்றை ஏற்கவில்லை.

எனவே இந்த செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை என்பதே சரியானதாகும்.