பாடம் : 1 இறைமறுப்பைவிட அடி, உயிரிழப்பு, அவமானம் ஆகியவற்றை ஒருவர் ஏற்பது.3
6941. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
எவரிடம் மூன்று தன்மைகள் இருக்கின்றனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை அடைவார். (அவை:) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு மற்ற எல்லாவற்றையும் விட அதிக நேசத்திற்குரியோராவது. 2. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது. 3. தாம் நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போன்று இறைமறுப்பிற்குத் திரும்புவதை அவர் வெறுப்பது.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.4
Book : 89