13. தடுக்கப்பட்ட மரம் எது?

0
216

13. தடுக்கப்பட்ட மரம் எது?

"ந்த மரத்தை நெருங்காதீர்கள்'' என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.


ஆனால் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இது எந்த மரம் எனக் கூறப்படவில்லை. மரம் எதுவென்பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை. எல்லா வசதிகளையும் செய்து கொடுத்த பின்பும் ஒரே ஒரு மரத்தை நெருங்காமல் ஆதம் (அலை) தம்மைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்பதும், அவர் வெளியேற்றப்பட்டதற்கு அது காரணமாக அமைந்தது என்பதும் தான் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

தடுக்கப்பட்ட மரம் இதுதான் என்று ஆதாரமில்லாமல் கூறுவது இட்டுக்கட்டும் குற்றத்தில் சேர்ந்து விடும்.

பகிர்

பதிலளி

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்
உங்கள் பெயர்