மன்ஸில் துஆ ஓதலாமா?

கேள்வி :

எவ்வாறு துஆ கேட்பது? அதாவது நபிகள் நாயகம் காட்டித் தந்த வழி என்ன? அல்லாஹ் எவ்வாறு துஆ கேட்கும்படி சொல்லியிருக்கிறான். பூரணமான விளக்கம் தரவும். காரணம் நான் மன்ஸில் கிதாபைப் பார்த்தேன். குறிப்பிட்ட சூராவை இத்தனை தடவை ஓதினால் உங்கள் துஆவில் பலன் கிடைக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. துஆ என்பது மிகவும் முக்கியம். ஆகவே தெளிவாக விளக்கவும்.

நாஜிக்

பதில் :

நீங்கள் குறிப்பிட்ட மன்ஸில் என்ற கிதாப் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தொகுக்கப்பட்ட புத்தகம் அல்ல. எந்த ஆதாரமும் இல்லாமல் அல்லது பல தவறான செய்திகளை அடிப்படையாக வைத்து தொகுக்கப்பட்ட நூல்.

எனவே அதனடிப்படையில் உங்களுடைய வணக்கத்தை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டாம். குறிப்பிட்ட சூராக்களை ஓதினால் துஆவில் பலன் கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எவ்வாறு துஆ கேட்பது? எந்த துஆ ஏற்கப்படும்? எந்த துஆ ஏற்கப்படாது? துஆவின் ஒழுங்குகள் என்ன? என்பது பற்றி முழுமையாக அறிய துஆவின் ஒழுங்குகள் என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.