மதுபானம் அருந்தியவரின் தொழுகை ஏற்கப்படாதா?

கேள்வி :

மது அருந்தியவரின் நாற்பது நாட்கள் தொழுகை ஏற்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

நூர்

பதில் :

இது குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் நஸாயி, முஸ்னத் அஹ்மத் மற்றும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

أخبرنا علي بن حجر قال أنبأنا عثمان بن حصن بن علاق دمشقي قال حدثنا عروة بن رويم أن بن الديلمي ركب يطلب عبد الله بن عمرو بن العاص قال بن الديلمي فدخلت عليه فقلت هل سمعت : يا عبد الله بن عمرو رسول الله صلى الله عليه و سلم ذكر شأن الخمر بشيء فقال نعم سمعت رسول الله صلى الله عليه و سلم يقول لا يشرب الخمر رجل من أمتي فيقبل الله منه صلاة أربعين يوما

என் சமுதாயத்தில் மது அருந்தும் ஒருவனின் நாற்பது நாட்களின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : நஸாயீ, அஹ்மத்