மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?

கேள்வி :

மக்கத்துக் காஃபிர்கள் நபிமார்களின் சிலைகளை வணங்குவதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, அங்கு யூதர்களும் கிறித்தவர்களும் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணங்கியதைப் பார்த்தார்கள் என்று ஹதீஸ் உள்ளது. மதீனாவில் எந்த நபிமார்களின் அடக்கத்தலம் உள்ளது?

இர்ஃபான், தர்மபுரி

பதில்:

மதீனாவில் நபிமார்களின் அடக்கத்தலங்கள் உள்ளன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

صحيح البخاري

435 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ عَائِشَةَ، وَعَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالاَ: لَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ بِهَا كَشَفَهَا عَنْ وَجْهِهِ، فَقَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى اليَهُودِ وَالنَّصَارَى، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ» يُحَذِّرُ مَا صَنَعُوا

நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிய யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தான் ஹதீஸ் உள்ளது.

நூல் : புகாரி 435, 436, 437

இந்த ஹதீள்களைத் தான் நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டீர்கள். இந்த ஹதீஸ்களில் மதீனாவில் நபிமார்களின் அடக்கத்தலம் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. யூத, கிறித்தவர்களின் செயல்கள் பற்றியே குறிப்பிடப்படுகின்றது.

நாகூரில் உள்ள அடக்கத்தலத்தை தர்மபுரியில் இருந்து கொண்டு சிலர் வணங்குவதில்லையா? அது போல் எகிப்து, ஜெருஸலம் போன்ற ஊர்களில் அடக்கம் செய்யப்பட்ட நபிமார்களை மதீனாவில் இருந்து கொண்டே யூதர்கள் வணங்கினார்கள் என்றே இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.