பெருநாள் தினத்தில் குளிப்பது

கேள்வி :

பெருநாள் தினத்தில் குளிக்காமல் இருக்கலாமா?

பதில் :

பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை.

இப்னுமாஜா, பஸ்ஸார் போன்ற நூல்களில் பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி ஹதீஸ்கள் இடம் பெற்றிருந்தாலும் அவை பலவீனமானவையாக உள்ளன. “பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸையும் நான் காணவில்லை” என்று பஸ்ஸார் அவர்களே குறிப்பிடுகின்றார்கள்.

எனவே பெருநாள் அன்று ஒருவர் குளிக்காமல் இருந்தால் மார்க்கத்தில் அவருக்கு எந்தக் குறைவும் ஏற்படாது.