நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் போன்ற இன்ன பிற அறிஞர்களை இணை வைத்து ஒப்பு நோக்கலாமா?
கௌ. பஜ்ருல்லாஹ், வத்தலக்குண்டு

நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்துக்கள் இறைவனின் புறத்திலிருந்து வந்தவை. சாக்ரடீஸின் கருத்துக்கள் மனித சிந்தனையில் உதித்தவை. இந்த இரண்டு கருத்துக்களும் ஒரு போதும் சமமாக முடியாது.

“நபிகள் நாயகத்தைப் போல் சாக்ரடீஸ் என்பவரும் பல தத்துவங்களைக் கூறியுள்ளார்’ என்று கூறக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதுச் செய்திக்குப் பங்கம் வரும் வகையில் ஒப்பு நோக்கக் கூடாது.